• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை தொகுதியில் வினோத போட்டி-ப.சிதம்பரம் பேட்டி

ByG.Suresh

Apr 16, 2024

சிவகங்கை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கிராமப்புற மக்கள் வரை பேசுகிறார்கள். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் சிதைந்து போனது என்று கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்..,

மேலும், பாஜகவினர் கச்சத்தீவு குறித்து பேசுவது அரசியல் சித்து விளையாட்டு என்ற ப.சிதம்பரம், பாஜக தேர்தல் வாக்குறுதியில் கச்சத்தீவு குறித்து எதுவும் குறிப்பிடாததே அதற்கு உதாரணம் என்று கூறினார். நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த சட்ட மசோதாக்களை எல்லாம் ஆதரித்து வாக்களித்த அதிமுக, தற்போது பாஜகவுடன் உறவில்லை என்பது கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போன்றது எனக் கூறியவர், தமிழ்நாட்டின் இட்லி, தோசைகளை பிரதமருக்கு பிடித்ததில் மகிழ்ச்சிதான். ஆனால் மக்களுக்கு அவரை பிடிக்கவில்லையே எனவும் நக்கல் அடித்தார். சிவகங்கை தொகுதியில் வினோத போட்டி நடப்பதாக தெரிவித்தவர், நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார் எனவும், அவரை எதிர்த்து சுற்றுலா பயணிகள் போல் வந்துள்ள இரண்டு வெளியூர் நபர்கள் நிற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.