• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர முதல்வர்
ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது 50வது பிறந்த நாளில் அவருக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.