கிராமி விருது பெற்ற 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘நோ டைம் டூ டை’. தனது சகோதரர் பினியஸ் ஒ’கன்னல் உடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் பில்லி எலிஷ். நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை இவர்களது ‘நோ டைம் டூ டை’ தட்டிச் சென்றது. இசையமைத்த இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கர் விருது வென்ற முதல் நபராக மாறியுள்ளார் பில்லி எலிஷ்.