• Thu. Apr 18th, 2024

பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசை

பீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய ஒற்றுமையை பறை சாற்றுவதை காட்டுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாகர்கோவில் நடைப்பெற்ற கல்லூரி விழாவில் பேச்சு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட்டு கிறிஸ்தவ கல்லூரியின் 130வது ஆண்டு விழா இன்று துவங்கியது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது ” இந்தியா 150 நாடுகளுக்கு கொரானா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருவதாகவும் தடுப்பூசி மருந்துகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த காலம் மாறி, கொரோனா காலகட்டத்தில் இந்தியாவிலேயே தயாரான தடுப்பூசி மருந்தால் ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது மத்திய அரசின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் உழைப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால் தான் எதிர்கால இந்தியாவில் புகழ்பெற்ற நிலையை அடைய முடியும். இந்திய நாடு வளர்ந்து வருகிறது மாணவர்கள் ஒரு விஞ்ஞானியாகவோ மருத்துவராகவோ மற்றும் உயர்ந்த பதவிகளில் வரவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். மேலும் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஈடுபட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் போது கல்லூரியில் பீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய ஒற்றுமையை பறை சாற்றுவதை காட்டுகிறது என கூறினார்,இந் நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *