தமிழகத்தில் பல இளைஞர்கள் படித்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில் அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலை தற்போது மாறி தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல இளைஞர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் பெரியார் கல்லூரியில் மார்ச் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே விருப்பம் இருப்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04142-290039, 9499055909 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.