• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செய்திக்களமாக மாறிய பிக்பாஸ் வீடு …

ByA.Tamilselvan

Nov 2, 2022

பிக்பாஸ் சீசன் -6ல் இந்த வாரம் முழுமுழுக்க செய்திகளமாக மாறி வருகிறது.உலகப் புகழ்பெற்ற சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனை இந்த மாதம் 9-ம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. . ஐந்து சீசன்களை தொடர்ந்து ஆறாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் சம்பவங்களை தெரிந்த கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் போடியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் ஒரு அணியினர் அந்த டிவி என்றும் மற்றொரு அணியினர் இந்த டிவி என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த போட்டிகளால் பிக்பாஸ் வீட்டில் தினம் தினம் வாக்குவாதமும் ,சண்டையும் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று முழுக்க பிக்பாஸ் வீடு செய்திக்களமாக மாறி உள்ளது. அந்த டிவி, இந்த டிவி இரண்டுமே பிரேக்கிங் நியூஸ் கொடுப்பது தான் இந்த டாஸ்க். அதில் போட்டியாளர்களான ஜனனியும், தனலட்சுமியும் செய்தி வாசிப்பாளர்களாக இருக்கின்றனர். அதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளன.