தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கம்பராயபெருமாள் கோவில் வளாகத்தில் ரூ 64 லட்சத்தில் கட்டப்படவுள்ள கலைக்கூடம், உணவுக்கூடத்திற்கான பூமி பூஜை கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் அருள் மிகு கம்பம் ஸ்ரீ கம்பராயபெருமாள் காசி விஸ்வநாதர் கோயில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு சிவன், பெருமாள் கோயில்கள் ஒரேவளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.
இக்கோவிலில், உபயதாரர்கள் முலம் ஷஷ்டி மண்டபம் சீரமைத்தில், ராஜகோபுரம் உணவுக்கூடம், சிமென்ட் சாலை, சுவாமி சன்னதி விமானம் புதுப்பித்தல், விநாயகர் சன்னதி புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் ரூ 3.75 கோடியில் திருக்கோயில் வளாகத்தில் திருமணமண்டபம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரூ 64 லட்சத்தில் கட்டப்படவுள்ள கலைக்கூடம், உணவுக்கூடத்திற்கான பூமி பூஜை இன்று கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ஆர். ஜெயபாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை தேனி மாவட்ட கோயில் ஆய்வாளர் கார்த்தி, கம்பம் கம்பராய பெருமாள் கோவில் நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நதியா, கம்பம் நகர திமுக செயலாளர்கள் எம்.சி வீரபாண்டியன், சி. பால்பாண்டி ராஜா, திமுக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் கம்பம் இரா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் குரு குமரன் மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கூறுகையில், கோயில்வளாகத்தில், பரதநாட்டியம், இன்னிசைக்கச்சேரி நடைபெறும் நேரங்களில், பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நனையாமல் இருப்பதற்காக ஒரு கலைக்கூடம் தேவை என்ற கோரிக்கை துறை அமைச்சரிடம் வைக்கப்பட்டு, அதற்காக ரூபாய் 50 லட்சத்தில் கலைக்கூடத்திறகான பூமிபூஜை இன்று நடைபெற்றது.

அத்துடன் உணவுக்கூடம் கட்டப்பட்டு நிதியில்லாமல் நிறுத்தப்பட்டதற்கு ரூபாய் 14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தெடங்க உள்ளது. இரண்டு மாத காலத்திற்குள்ளாக இந்த கலைக்கூடம் மற்றும் உணவுக்கூட பணிகள் முடிவடையும். விரைவில விமாணப்பணிகள், ஆர்ச் பணிகள் நடைபெறும். கோயில் வளாகத்தில் 3 ஆயிரம் ஆன்மீக நூல்கள் சேமித்து வைக்கும் நூலகம் ஒன்று கட்டுவதற்கான இடமும் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.
நூலகம், கலையரங்கம், கலைக்கூடம், திருமணமண்டபம், உணவுக்கூடம், பக்தர்கள் தங்கும் அறைகள், சிவனுக்கு நந்தவனம், பெருமாளுக்கு நந்தவனம், தேவைப்படும் இடங்களில் விளக்கு, முதியவர்கள் அமரும் இருக்கைகள் என அனைத்து வசதியும் உள்ளடக்கிய சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான இத்திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இறைவனுக்கு செய்கின்ற சேவையாக கருதி இத்திட்டங்கள் நடைபெற்று, வரும் ஆண்டிற்குள் நிச்சையமாக குடழுக்கு நடைபெறும் என்றார்.