

திகில் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது
படத்துக்கு லவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பரத்தின் திரைப்பயணத்தில் பாலாஜிசக்திவேல் இயக்கத்தில் உருவான காதல் படம் மிகப்பெரிய பலமாக அமைந்தது. பரத் நடிக்கும் ஐம்பதாவது படத்திற்கு
காதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான லவ் என்கிற பெயர் வைக்கப்பட்டிருப்பதால் இந்தப்படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்