• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய மூன்றாவது நபர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் கண்மணி மனோகரன்.

ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது மனம் மாறி அனைவரும் ரசிக்கும் நல்லவராக நடித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி திடீரென அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கு முன்பு ஏற்கனவே அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவரும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது அஞ்சலியாக நடித்து வந்தவரும் தொடரில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து டென்ஷனான பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் தனது இன்ஸ்டாகிராமில், அய்யோ அய்யோ.. என்னத்த சொல்றது! எத்தனை மாற்றம் என பதிவிட்டுள்ளார்.