• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

5ஆம் நாளை எட்டிய பாரத ஒற்றுமை யாத்திரை!!

Byகாயத்ரி

Sep 12, 2022

பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 5ஆம் நாளை எட்டியுள்ளது. கேரள, திருவனந்தபுரம் தொடங்கிய இந்த யாத்திரை கஜகூட்டம் பகுதியில் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்றோடு 5ஆம் நாளாகிறது. இந்த 5ஆம் நாள் பயணம் இன்று கேரளாவில், திருவனந்தபுரம் எல்லையில் தொடங்கி உள்ளார் ராகுல் காந்தி. இந்த பயணத்தில் மொத்தமாக 3,570 கிமீ-ஐ பாரத ஒற்றுமை யாத்திரை மூலம் நிறைவு செய்ய உள்ளார். இன்று காலை 11 மணியளவில் பாட்டத்தில் யாத்திரை நிறுத்தப்பட்டு, அதன் பிறகு மாலை 5 மணிக்கு யாத்திரை தொடங்கி, கஜகூட்டம் சென்றடையும், அங்கு இன்றைய பயணம் முடிவடையும்.