
சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சசிகலாவுக்கு புதிய செக் வைத்த இபிஎஸ் தரப்பு.
இபிஎஸ் சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்தூரிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கஅனுமதி வழங்கக்கூடாது என்று எம்.எல் ஏ.ஜெயசங்கரன்,நகர செயலாளர் மோகன் ஆகியோர் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். அதிமுகவிற்கு சம்பந்தம் இல்லாத நபருக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்க முடியாது அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
