மறைந்த இந்திய தேசத்தின் பிரதமர் “பாரத ரத்னா” அன்னை இந்திரா காந்தி அவர்களின் 39-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (31-10-2023) நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராவின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிகள் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்லாசர், மாநில செயலாளர் சினிவாசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், அனுஷாபிரைட், மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா, எஸ்சி. எஸ்டி மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, மணக்குடி லாரன்ஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
