வருங்கால குழந்தைகளுக்கு தர்மத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை சங்கர மடத்தில் ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
வருங்கால சந்ததியினருக்கு பெற்றோர்கள் தர்மத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்ற விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.
மதுரை சொக்கிகுளம் பெசன்ட் ரோடு ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் இன்று சுவாசினி பூஜை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர். நிகழ்வில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சுவாசினி பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு ஆசி வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது…
கும்பாபிஷேக வைபவங்கள் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். சமீப காலமாக புஷ்கரம் உற்சவம் தமிழ்நாட்டில் பிரபலமாகி வருகிறது. ரிஷி பஞ்சமி, நாக பஞ்சமி, வசந்த பஞ்சமி, சுக்கிர பஞ்சமி போன்றவைகள் உண்டு. சிலருக்கு பலவற்றை சொல்லிக் கொடுப்பதில்லை .
கடந்த 1963ஆம் வருடம் மீனாட்சி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதில் மகா பெரியவா பங்கேற்று சிறப்பித்தார். 1995ஆம் வருடம் ஒரே நேரத்தில் மூன்று கும்பாபிஷேகங்கள் நடைபெற்றது. திருச்செந்தூர், சங்கரன்கோவில், அதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாங்கள் காஞ்சி ஓரிக்கையில் சாதுர் மாஸ்ய விரதம் முடித்து இங்கு வந்துள்ளோம். மீனாட்சி அம்பாள் கும்பாபிஷேகம் முடிந்து இன்று அம்பாள் தரிசனம் செய்தோம். ரொம்ப அற்புதமாக இருந்தது.
காஞ்சிபுரம் பட்டு, புஷ்பங்கள் கொண்டு வந்து அம்பாளுக்கு சாத்தப்பட்டது.மதுரை ஜெய் நகரில் வேத பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. ஜெ யேந்திர பவனம் என்று பெயர். இவைகள் அனுஷ்டான கேந்திரம் என்று அழைக்கப்படும். சமீப காலமாக அக்ரகாரங்கள் குறைந்து வருகிறது .காவேரி போன்ற பாடல் பெற்ற ஸ்தலங்களில் பதிகம் பாடி சிறப்பிக்க வேண்டும். கிராமத்தில் உள்ள பாரம்பரியம், வைதீகம் மரபு மாறாமல் யாத்ரிக நிவாஸ் அமைக்கப்படுகிறது. தர்மம், ஸ்ரத்தை இருந்தால் தான் எதுவும் நடக்கும். மதுரை அடுத்துள்ள திருவேடகத்தில் மகா பெரியவா 1928 ஆம் ஆண்டு சாதுர் மா ஸ்ய பூஜை நடத்தி இருக்கிறார்கள்.
அங்கு உள்ள விநாயகர் கோவிலில் பெரியவா பூஜை செய்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு பலகை வைக்கப்பட்டுள்ளது .வரும் வருடங்களில் நூற்றாண்டு விழா விசேஷங்களை அங்கு நடத்தலாம் என உத்தேசித்து உள்ளோம்.
தோப்பூரில் சக்க்ஷம் என மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி இருக்கிறது அங்கு சென்று வந்தோம். கன்யா பூஜை, சுவாசினி பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .ஒவ்வொரு குடும்பத்தினரும் இதை முக்கியமான வெறும் கொண்டாட்டமாக கருதாமல் தர்மத்தின் அடையாளமாக இதை அனுஷ்டிக்க வேண்டும்.

பஞ்சாங்கத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. இதை நாம் பிரபலப்படுத்த வேண்டும். சக்தி பீடங்களில் உள்ள நம்முடைய தர்மம், சம்பிரதாயத்தை நாம் மறந்து விடக்கூடாது. பெண்கள் தர்மத்திற்காக பாடுபட வேண்டும். பக்தி பண்புகளை நம் குழந்தைகளுக்கு நிறைய கற்றுக் கொடுக்க வேண்டும். காமாட்சி ஸ்தோத்திரம் போன்ற நல்ல பாடல்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இதில் நாம் ஒவ்வொருவரும் அதில் விருப்பம் வைத்து செயல் வடிவில் உருவாக்கி ஞானம் சித்திக்கிற வழியை மேற்கொள்ள வேண்டும்.
நாம் எதற்கும் ஆசைப்பட்டால் மட்டும் போதாது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் பகீரத முயற்சி வேண்டும். இவ்வாறு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.

மதுரை சொக்கி குளம் பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி பீட சங்கர மடத்திற்கு வருகை வந்த சுவாமிகளுக்கு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் தமிழக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் இணைந்து வேல் வழங்கினர். செல்லு ராஜு குடும்பத்துடன் வந்து சுவாமிகளை தரிசித்தார்.
சுவாமிகள் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மதுரை காஞ்சி பக்த மகா ஜனங்கள் சார்பாக வரவேற்பு குழு பொறுப்பாளர்கள் டாக்டர் டி. ராமசுப்பிரமணியன், எல். வெங்கடேசன், ஆடிட்டர் சுந்தர், ஸ்ரீராமன், குமார், பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.




