சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நிழற்குடை அமைக்க பொதுமக்கள் பயணிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் நிழல் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் மழை பெய்யும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் பொதுமக்கள் மழையில் நனைந்து சிரமப்படுவதாக கூறுகின்றனர். கடந்த சில வருடங்களாக சோழவந்தானின் ஜெனகை மாரியம்மன் கோவில் காமராஜர் சிலை வட்ட பிள்ளையார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மருது மஹால் பேருந்து நிலையம் பசும்பொன் நகர், பேட்டை பெரிய கடை வீதி பகுதி உள்ளிட்டவைகளில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாத நிலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி பேருந்து நிறுத்தங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான நிலையில் தற்போது வரை நிழற்குடை அமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது மழை காலம் தொடங்கி விட்ட நிலையில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் உடனடியாக சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




