ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்றும் H1B தொடர்பாக வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது,

எல்லாருக்குமே ஒரு வான வேடிக்கை மாதிரி இன்று ஒரு அறிவிப்பை பிரதமர் வெளியிடப் போகிறார். நாளைய தினத்திலிருந்து நாம் எந்த பொருள் வாங்கினாலும் விலை குறைவாக வாங்க கூடிய நிலையை நமது இந்திய பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். பாக்கெட்டில் நிரம்பிய பணம் இருக்க போகுது. மிச்சமாக போகிறது.
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஏற்றிய வரி தொகை என்னைக்குமே இறக்கியது கிடையாது. ஆனா இன்னைக்கு பிரதமரின் அறிவிப்பு மூலமாக ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கிறோம்.
சாமானிய மக்களின் வாழ்வில் வீடு வாங்க முடியும். கார் வாங்க முடியும் 60 ஆயிரம் ரூபாய்க்கு வரி குறைப்பு நடக்க போகிறது டூவீலர் 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை குறையும். இந்த வரி குறைப்பு மூலமாக 2 லட்சம் கோடி மக்களுக்கு மிச்சமாகும். மிகப் பிரம்மாண்டமான ஒரு புரட்சி இந்திய சுதந்திரத்திற்கு பின்பு ஒரு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரம் கிடைக்கிறது.
உங்களோடு நான் எங்களோடு நீ இப்படியே வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர மின் கட்டணம் ஏரியாச்சு.பதிவு கட்டணம் ஏரியாச்சு.இன்னைக்கு எல்லா விலையும் ஏறிவிட்டது. ஆனா உங்களோடு ஸ்டாலின் என்பது தவறான வாதம். உங்களோடு பிரதமர் சரியான வாதமாக இருக்கும். உங்களோடு பாஜக என்பதா சரியான வாதம். என்பது மிகப்பெரிய சமுதாய புரட்சி பொருளாதார புரட்சி…

ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள். H1B தொடர்பாக வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவர்களுக்கான பணி பாதுகாப்பு மற்றும் திரும்ப வருவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும். பிரதமர் மோடி யாரையும் கைவிட மாட்டார்.
கனிமொழியின் குற்றச்சாட்டிற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன் வலுவான கூட்டணியாக பாஜக அதிமுக அமைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சுமுகமாக உள்ளார்கள். அது திமுகவினருக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பாஜகவிற்கு யாராவது பி-டீமாக இருப்பார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் பாஜக people’s டீம்.