தாமரை எண்ணெயின் மகத்துவம்:
தாமரைப் பூவை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட, எண்ணெயாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்துக்குள் எளிதில் ஊடுருவி அதனைப் பாதுகாக்கிறது. தாமரை எண்ணெய்யைத் தொடர்ந்து உபயோகித்துவர சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தைப் பொலிவாக்கும். மேலும், இந்த எண்ணெயை முகத்துக்கு மட்டுமின்றி கை கால்களுக்கும் பூசிக்கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தருகிறது.
தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். மேலும், தாமரை எண்ணெய் தலைமுடி உதிர்வைத் தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும்.