• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Aug 25, 2022

வழுக்கை வராமல் தடுக்கும் செம்பருத்தி:

செம்பருத்தி மற்றும் செம்பருத்தி இலைகள் தலைமுடி வளர்ச்சிக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. செம்பருத்தி அற்புதமான கண்டிஷனராக செயல்படுகிறது. தலைமுடியை பொடுகிலிருந்து காப்பாற்றுகிறது. செம்பருத்தியில் விட்டமின் ஏ, சி மற்றும் முடி வளர அடிப்படைதேவையான அமினோ ஆசிட் அதிகம் உள்ளது.
செம்பருத்தி, செயலற்ற மயிர்க்கால்களைக் கூடத் தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த மூலிகையை தவறாமல் பயன்படுத்துவதால் வழுக்கை வராமல் தடுக்கலாம். செம்பருத்தியை தனியாக இல்லாமல் யோகார்ட் அல்லது வெந்தயத்துடன் சேர்த்து கலவையை தயாரிக்கவும். இது கூந்தலை இன்னும் அழகாக்கும், பலப்படுத்தும்.

செம்பருத்தி-யோகார்ட் கலவை செய்முறை:
ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் – 8-10, யோகார்ட் – 3-4, டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ்மேரி எண்ணெய் – சில துளிகள் போதுமானது.
முதலில் செம்பருத்தியின் தண்டினையும், அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும். அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும். தேவைக்கேற்ப நீர்விடவும். அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.
விருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம். ரோஸ்மேரி எண்ணெய் கூந்தல் வளர உதவிபுரிகிறது. இப்போது இந்த கலவையை தலை முடியின் வேர்கால்களிலிருந்து தடவ வேண்டும். முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.