• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Aug 12, 2022

உப்பு ஸ்கிரப்:
உடம்பு வலியால் தவிப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிக்கும்போது வலி நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங்கை, முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உப்பு ஸ்கிரப் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டு தருவதுடன், இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது.
இதனால், சருமம் வழுவழுப்பாக மாறும். உடலில், உப்பு ஸ்கிரப்பைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் ரத்த ஓட்டம் சீராகும். உப்பை காபித் தூளுடன் கலந்து உடலில் ஸ்கிரப்பாகப் பயன்படுத்தும்போது, செல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் பெற முடியும். உப்பு ஸ்கிரப்பிங் செய்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் போது, உடலும், மனதும் புத்துணர்வு பெறும். தக்காளியுடன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது, முகம் பொலிவுடன் தோற்றமளிக்கும்.