

பொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு பெற உதடு மிக முக்கியமான ஒன்றாகும். உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகள் பற்றிப் பார்ப்போம்.

*உதடு சிவப்பாக காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்.
*உதடு சிவப்பாக முகத்தை தேய்க்கும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் பயன்படுத்தினால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.
*உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் மாற்றம் தெரியும்.

*உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.
*கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.
