• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byகாயத்ரி

Jul 13, 2022

பெண்களின் சருமத்தை தாக்கும் அத்தனை பிரச்சனைகளையும் விலை மலிவாக கிடைக்கும் கடலை மாவை கொண்டு எப்படி போக்குவது என்பது பற்றி காணலாம்.

சருமம் மென்மையாக…

சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.

பளிச்சென்ற தோற்றம் பெற..

அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும்.

குளிக்கும் போது..

குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.