• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்பு

Byகாயத்ரி

Jul 14, 2022

கை, கால்கள் பளிச்சிட

தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த்து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடையில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்களில் தேய்த்த பின், குளிர்ந்த நீரில் கால்களை மூன்று நிமிடம் வைக்க வேண்டும். பின்னர் மிருதுவான பருத்தித் துணியால் துடைத்து, தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசர் – ஐ கால்களில் தேய்த்து விடவும். இதே முறையைக் கைகளுக்கும் செய்துவந்தால் கைகளும், கால்களும் நன்கு பளபளக்கும்.

இம்முறை உங்களால் தினமும் செய்ய முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது இவ்வாறு செய்துவர வேண்டும். தினமும் தூங்கப்போகும் முன் கால்களை வெந்நீரில் ஊறவைத்து புதிதாக வாங்கிய பல் துலக்கும் பிரஸ்சால் கால்களைத் தேய்த்து நன்கு தூய்மை செய்யலாம். கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், கால்கள் மிருதுவாக இருக்கும்.