• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

சர்க்கரையை வைத்து அழகு குறிப்பு

ByMalathi kumanan

Dec 6, 2022

சர்க்கரையை வைத்து அழகு குறிப்பு

  1. சர்க்கரையில் சிறிது எலுமிச்சம் சாறு சேர்த்து கலந்து அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்
  2. சர்க்கரை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆறு சொட்டு கஸ்தூரி மஞ்சள் அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்தால் முகம் பொலிவோடு இருக்கும்
  3. தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் மேல் சர்க்கரை தூவி முகத்தில் ஸ்கிரப் செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்
  4. தேனில் சிறிது எலுமிச்சம் சாறு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி சர்க்கரை எடுத்து ஸ்க்ரப் போன்று முகத்தில் மசாஜ் செய்யவும் பிறகு 15 நிமிடம் கழித்து கழிவினால் முகம் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் காணப்படும் வாரம் ஒரு நாள் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்
  5. இரவு தூங்குவதற்கு முன்னர் ரோஸ் வாட்டர் கொண்டு பஞ்சில் நினைத்து முகம் முழுவதும் துடைத்து மசாஜ் செய்யவும் பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும்
  6. குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து நன்றாக ஊறியவுடன் அந்த கலவையை முகத்தில் பேட் போன்று அப்ளை செய்த பின் சுகரும் எலுமிச்சை சாறும் கலந்து ஸ்கரப் செய்து அதன் மேல் அரிசி மாவினை பேக் போன்று ஐந்து நிமிடம் காய விட வேண்டும் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அழுவும்
  7. முகத்தில் முட்டையின் வெள்ளைக்கரு அதனுடன் சக்கரை சோள மாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து பசை போல் ஆனது முகத்தில் தடவவும் தேவையற்ற முடிகள் மேல் தடவலாம் புருவம் மற்றும் தலைமுடிகளில் தடவக்கூடாது பசை போல் கலவை ஆனதும் முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக பிரித்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்து விடும் முகம் அழகாகும்
  8. கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரை மணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரின் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போகும் இதனை வாரம் மூன்று முறை செய்து வர வேண்டும்
  9. சோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பை போட்டு கண்களை கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதால் சோர்வு நீங்கி கண் பிரகாசமாக இருக்கும்