• Sat. Apr 20th, 2024

புதரில் சிக்கி தவித்த கரடி- வனத்துறையினர் மீட்பு

Byகாயத்ரி

Nov 30, 2021

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன.

இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே பட்டா நிலத்தில் சுற்றித் திரிந்த போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த கம்பியில் சிக்கி அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.இதைக் கண்ட அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் தலைமையில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் புதரில் சிக்கித் தவித்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தியதை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் புதரில் கம்பியில் சிக்கிய கரடியை மீட்டு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். கரடி புதரில் சிக்கி தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *