• Fri. Jan 24th, 2025

பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை என புதிய திட்டம் அறிமுகம்

BySeenu

Jun 3, 2024

பேங்க் ஆப் இந்தியாவில் நிலையான வைப்புத்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகமாகி இருப்பதாகவும், இதில் வாடிக்கையாளர்கள் அதிகம் பயனடைய முடியும் என பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கோவை மண்டல மேலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் வங்கியின் வளர்ச்சி குறித்தும்,வாடிக்கையாளர்களிடையே வங்கியின் புதிய திட்டங்களை கொண்டு செல்வதில் மேலாளர்களின் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
முன்னதாக பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநர் திரு. கார்த்திகேயன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வங்கி அறிமுகபடுத்தி உள்ள பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பேசினர்.குறிப்பாக,புதிதாக அறிமுகபடுத்திய, 666 நாட்கள் நிலையான வைப்புத் தொகை திட்டத்தில்,
ரூபாய் 2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகைக்கு 666 நாட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு ஆண்டிற்கு 7.95 சதவீதம் வழங்கும் இந்த தனித்துவமான முதலீட்டு வாய்ப்பை இதர வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். என அவர் தெரிவித்தார். இந்த 666 நாட்கள் நிலை யான வைப்புத் தொகை திட்டத்தை தொடங்குவ தன் மூலம் நிலையான வைப்புகளில் அதிக வருமானத்தை பெறலாம்.
வாடிக்கையாளர்கள் எந்த வொரு பேங்க் ஆப் இந்தியா கிளையையும் தொடர்பு கொண்டு வங்கியின் புதிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு அதில் சேர்ந்து பயன் பெறலாம் என கூறினார்.
மேலும், அடல் பென்சன் யோஜனா, சுரக்‌ஷாபீமா, ஜீவன் ஜோதி, பி.எம்.விஸ்வகர்மா என பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்க வங்கி தயாராக இருப்பதாகவும், இதில் தகுதியான நபர்கள் விண்ணிப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ,பேங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் முகேஷ் சர்மா, கோவை மண்டல மேலாளர் சம்பத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.