வங்கி அதிகாரிகள், ஊழியர்களை கழிசடைகள் என்று விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் ந.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 8ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில், ஆடிட்ட ரும், ரிசர்வ் வங்கியின் இயக்குநரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் முன்னிலையில் பொதுத்துறை வங்கிகளை கேவலப்படுத்தும் வகையில் பேசியும், அதன் அதிகாரி களை, ஊழியர்களை கழிசடைகள் என்று ஆதிக்க உணர்வுடன் இகழ்ந்தும் பேசியுள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் முன்பு குருமூர்த்தி இவ்வாறு பேசியது பொதுத்துறை வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இடையே மிகப் பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நாட்டு மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பை நன்கு உணர்ந்தவர்கள்.
பிரதமரும், நிதியமைச்சரும் பலமுறை வங்கி அதிகாரிகளை, ஊழியர்களை பெருமையாக பேசிய தருணங்களும் உண்டு. வங்கி ஊழியர்களின் சேவையை பாராட்டியும் உள்ளார்கள். வங்கித்துறை முழுமையாக தனியார் கைகளில் இருந்த காலம் உண்டு. 1969ஆம் ஆண்டுக்கு முன் திவாலான பல நூறு தனியார் வங்கிகளை பற்றி அறியாதவர் அல்ல குருமூர்த்தி. மக்கள் பணத்தை எவ்வாறு அன்றைய வங்கி முதலாளிகள் சுருட்டி கொண்டார் கள் என்பதை குருமூர்த்திக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி யும் அனைத்து சமூகத்திற்கான பயன்பாட்டிற்கு பொதுத்துறை வங்கிகள் உதவியதை குருமூர்த்தி நன்கு அறிந்ததே. இருப்பினும் தனி யார்மய கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் விதமாக பொதுத்துறை வங்கி களையும், அதன் அதிகாரிகளை யும், ஊழியர்களையும் கொச்சைப் படுத்துவதும்,
அதை ஒன்றிய நிதிய மைச்சர் முன்னிலையிலேயே அரங்கேற்றுவதும் விஷமத்தனமான அரசியலாகும். சுதேசியம் பேசும் குருமூர்த்தி வங்கிகள் தனியார்மய மானால் வெளிநாட்டு முதலாளிகளும் வங்கிகளை எடுத்துக் கொள்ளக்கூடும் என்பது கொள்கை முரண். இம்மாதிரியான குணம் கொண்ட ஒருவரைத்தான் ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கியின் இயக்குநராக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்துள் ளது. இத்தகைய பிற்போக்குத்தனமான எண்ணம் கொண்ட ஒருவரை ரிசர்வ் வங்கியில் இயக்குநராக வைத்திருப்பது கூட தேச வளர்ச்சிக்கு நல்லதல்ல. குரு மூர்த்தியின் இத்தகைய பேச்சிற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மிக வன்மையாக தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. குருமூர்த்தி தனது தவறான, தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். நிதியமைச்சகம் குருமூர்த்தியை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அனைத்து பொதுத்துறை வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கோருகிறது. இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிடும் என்று வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் எதிர்பார் கின்றார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கழிசடைகள் என்று விமர்சப்பதா?குருமூர்த்திக்கு வங்கி ஊழியர் சங்கம் கண்டனம்
