• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

வாகனத்தை ரவுடிகளை போல் தூக்கும் வங்கி ஊழியர்கள்..

ByB. Sakthivel

May 13, 2025

புதுச்சேரி கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவரின் வாகனம் அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அவரது வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இது குறித்து அவரது வீட்டின் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் மாஸ்க் அணிந்து வந்து அங்குமிங்கும் நோட்டமிட்டு பின்னர் வாகனத்தின் மீது அமர்ந்து காலால் ஹாண்டில் பாரின் சைட் லாக்கை உடைக்க முயற்சி செய்தபோது மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வருகிறார்.

இருவரும் ஹேண்டில் பாரை பிடித்து சைடு லாக்கை உடைத்து வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளோடு வில்லியனூர் காவல் நிலையத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் புகார் அளித்த போது வங்கி லோன் கட்ட தவறியதால் வாகனத்தை வங்கி ஊழியர்களே உடைத்து சென்றதாக கூறப்பட்டது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.