• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனியில் ஹேப்பி ஸட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை

Byவிஷா

Jan 31, 2025

தேனியில் ஞாயிறு அன்று நடைபெறவிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
தேனியில் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, விநாயகா ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகம் மற்றும் தேனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் ஏற்பாட்டில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின் பண்பாடு சீரழிந்து விடும் என பா.ஜ.க மற்றும் ஹிந்து முன்னணியினர் மனு அளித்திருந்தனர். இதனால் நிகழ்ச்சி நடத்துவதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்ய கூடுதல் ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமண்ய பாலசந்திராவுக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆய்வு செய்த ஏ.எஸ்.பி. நிகழ்ச்சி நடந்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்தார்.
அதனடிப்படையில் எஸ்.பி., நிகழ்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சி குறித்து அனுமதி இன்றி பேனர் வைத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.