தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்திர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிக்காட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள தாணிப்பாறை மலையில் அமைந்துள்ள கோவிலுக்கு 20.08.2021 முதல் 23.08.2021 வரை பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பக்தர்களுக்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.