• Tue. Apr 30th, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு!..

By

Aug 20, 2021

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.


இதற்கான,கால அவகாசம் வருகின்ற 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில்,அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு ,அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *