தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தில் இன்று நள்ளிரவு தொடங்கி, ஜூன் 14ஆம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும். இதன் காரணமாக மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.