ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திருச்சி பிராந்திய அலுவலகம் சார்பாக புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது ஊழியர் சேமலாப நிதி அமைப்பு திருச்சி பிராந்திய அலுவலகத்தின் சார்பாக இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிரதம மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் திருச்சி காந்திய சேமலாப நிதி ஆணையர் அஷீஷ் குமார் திரிபாதி தலைமை வகித்தார்

மேலான் இயக்குனர் ஜெயபால் புதுக்கோட்டை சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கராஜன் புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் வல்லுனர்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் நல சங்கத்தின் தலைவர் தங்கமூர்த்தி சிப்காட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

திருச்சி பிராந்திய அலுவலகம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக பிரதம மந்திரியின் திட்டத்தை தொழிலாளர்கள் பெறுவது சம்பந்தமாக விளக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ அஷிஷ்குமார் திருபாதி இந்தியாவில் அரசு வேலையில் பணிபுருபவருக்கு இணையாக தனியார் நிறுவனங்களின் பணியாற்றுபவர்களுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி வழங்குவதால் சமமான வாய்ப்பை மத்திய அரசு வழங்குவதாகவும் பாரத பிரதமரின் இத்திட்டத்தை தனியார் தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊழியர்கள் பிற நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுவதாகவும் இதன் மூலம் இந்தியாவில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் எனவும் மத்திய அரசின் திட்டத்தை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.