• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் காடுபட்டி காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByN.Ravi

Jun 15, 2024

சோழவந்தான் அருகே ,காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை, ஊத்துக்குளி, நாராயணபுரம், மேலக்கால், மன்னாடிமங்கலம், குருவித்துறை, காடுபட்டி, முள்ளி பள்ளம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கூடும் இடங்களில் காடுபட்டி சார்பு ஆய்வாளர் ராசு தலைமையில், தலைமை காவலர்கள் மாரியப்பன் ,பாபு காந்தி ,அலெக்ஸ் உள்ளிட்ட காவலர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், காவலர்கள் பொதுமக்கள் நல்லுணர்வு பேணுதல், மற்றும் இளைஞர்களை போதை பழக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளுதல், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் இளைஞர்கள் தவறான பாதைகளுக்கு சென்று விடாமல் இருப்பதற்கான அறிவுரைகள் உள்ளிட்டவைகள் குறித்து, விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தென்கரை அகிலாண்டேஸ்வரி கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று காவலர்களின் அறிவுரையை ஏற்று, நடப்பதாக உறுதியேற்று சென்றனர்.