• Fri. Sep 29th, 2023

சேலத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு…

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தனிமனித விழிப்புணர்வு அவசியம் என்ற அடிப்படையில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகன பயணத்தை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

முன்னதாக கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்வதால் என்னென்ன தீங்குகள் ஏற்படும் என்பது குறித்து பதாதைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த வாகனம் சென்று அங்குள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *