• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு..,

ByK Kaliraj

Jul 30, 2026

சிவகாசியில் உள்ள தனியார் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வரை சைக்கிளிலேயே சென்று வரும் 240 கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கியுள்ளனர்.

உடற்கல்வித்துறை மாணவர்கள் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ள சைக்கிள் ஊர்வலம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர், தேவதானம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி வழியாக 120 கிலோமீட்டர் தூரத்தை கடந்து குற்றாலத்தை சென்றடைகிறது.

செல்லும் வழியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், விளையாட்டை மேம்படுத்துவது குறித்தும் அனைத்து தரப்பு மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி பின்னர் குற்றாலத்திலிருந்து கிளம்பி 31- ம் தேதி மீண்டும் சிவகாசிக்கு வந்தடைகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலைக்கல்லூரி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது