• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கழிவு நீர் கால்வாய் செல்லும் பாதையை சீரமைக்க ராயல் கார்டன் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 ஆவது வார்டு ராயல் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மனுவில் தங்கள் பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் வருவதால் பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வந்து ஆபத்தை விளைவிக்க கூடிய நிலை இருப்பதாகவும் ஆகையால் தங்கள் பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காதவாறு ஏற்கனவே உள்ள கால்வாய் பகுதியை சீரமைத்து மழை நீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

இது குறித்து சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமாரிடம் ராயல் கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலர் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் கூறினார்கள்.