• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வு

ByKalamegam Viswanathan

Jun 5, 2023

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நடு விழா – சுங்கச்சாவடி வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வு .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி-யில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 101 மரக்கன்றுகளை நட்டு வைத்து, இதனால் விளையும் பயன்கள் குறித்து சிறுவர் , சிறுமிகளுக்கு விளக்கிய பின் அவர்களையும் மரக்கன்றுகளை நட வைத்து தினத்தை கொண்டாடினர்.


இதனைத்தொடர்ந்து, சுங்கச்சாவடி அலுவலர்கள், சுங்கச்சாவடி வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்…