• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காரியாபட்டியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ByG.Ranjan

Apr 9, 2024

காரியாபட்டி யில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. பாராளமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை யொட்டி தமிழகத்தில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. காரியாபட்டி வருவாய் துறை சார்பாக அனைத்து வருவாய் கிராமங்களிலும் தேர்தல் விழிப்புணர்வு , ரங்கோலி கோலப் போட்டிகள் , மரக்கன்று நடுதல், பள்ளி , கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிகள் நடை பெற்றது. காரியாபட்டி வருவாய் துறை சார்பில் பஸ் நிலையம் முன்பு 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. . நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் சிவனாண்டி, வருவாய் ஆய்வாளர் சிவராமன், கிராமநிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர்.