

மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை கரும்பாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை கரும்பாலை நாடார் இளைஞர் பேரவை கரும்பாலை நாடார்மகளிர் அணி சார்பில் மாணவர் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த பரிசளிப்பு விழாவிற்கு கரும்பாலை நாடார் உறவின்முறை தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையிலும் ஆதிபிரகாஷ், மரியஸ்வீட்ராஜன்,பிரபாகரன், ஜான்கென்னடி, மகளிர் அணி ராஜம்மாள்,பாக்கியலட்சுமி, கோகிலா,செலின், பிரியா ஆகியோர் முன்னிலையிலும்சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மலைச்சாமிமற்றும் சூசைஅந்தோணி, தங்கராஜ் 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் முருகன் திமுக வட்ட செயலாளர் முத்துமோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் நோட்டுப் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள் விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சென்றனர் இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை குட்டி (என்ற) அந்தோணிராஜ் செய்திருந்தார்.
