மதுரை வில்லாபுரத்தில் தனியார் ஆரம்பப் பள்ளியின் 33வது ஆண்டு விழாவில் விருது நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டார்.
கல்வி என்பது மாணவர்களுக்கு வாழ்க்கையை வளமாக்கும். கல்வி கற்பதன் மூலம் ஏனைய செல்வங்களை பெறலாம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் கல்வி கற்று சாதனை புரிய வேண்டும். மாணிக்கம் தாகூர் M.P.

மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் 33 ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்குவில்லாபுரம் சங்கவிநாயகர் கோவில் நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார்தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் அவனியாபுரம் நகர் மாவட்ட காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி பயணியர் பள்ளி தாளாளர் டேனியல் , மாமன்ற உறுப்பினர் குட்டி என்ற ராஜரத்தினம் சர்கீல் கமிட்டி தலைவர் செல்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர் விருதுநகர்நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாணவர்களிடம் கூறும்போது. மாணவர்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய செல்வம் அவர்கள் கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் அடைய கல்வியை நன்கு பயன்படுத்த வேண்டும்.

கல்வி மூலமே மற்ற செல்வங்களை தேடிக் கொள்ளலாம் ஆகையால் உங்கள் வீட்டிற்கும் ஆசிரியர்களுக்கும் நன் மாணவர்களாக விளங்கி கல்வியில் சாதனை புரிய வாழ்த்துகிறேன் என கூறினார்.விழாவில் பள்ளித் தாளாளர் பொன்னிறகுபதி நன்றியுரை கூறினார். பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் நடைபெற்றது.




