• Wed. Apr 23rd, 2025

குப்பைத்தொட்டி அருகில் ஆறு மாத பெண் சிசு இறந்த நிலையில்..,

ByKalamegam Viswanathan

Mar 23, 2025

மதுரை மாநகர் மஹபூப்பாளையம் அன்சாரிநகர் 7ஆவது தெரு கோவில் பிள்ளை காலனி அருகே குப்பைத்தொட்டி அருகில் ஆறு மாத பெண் சிசு இறந்த நிலையில் உடல் கிடந்திருக்கிறது இதைப் பார்த்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலை அடுத்து எஸ் எஸ் காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து

*சிசுவின் உடலை மீட்டு யார் இந்த சிசுவை இப்பகுதியில் இறந்த நிலையில் வீசி சென்றது சிசு பிறந்தவனே இறந்து விட்டதா இல்லை சிசுவை கொலை செய்து வீசிவிட்டு சென்றார்களா என்று பல்வேறு வண்ணங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிறார்கள். மேலும் சிசுவின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.