• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை… போலீஸார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Sep 22, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25. இவர் சோழவந்தான் பகுதியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரை வற்புறுத்தியதாகவும், அதற்கு சிறிது காலம் செல்லட்டும் என பெற்றோர்கள் கூறியதாகவும், இதனால் விரத்தி அடைந்த சுந்தர பாண்டியன் நேற்று இரவு கோவில் குருவித்துறையில் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுந்தரபாண்டியன் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுகாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காடுபட்டி
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.