• Thu. Mar 23rd, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தைஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால்அதுதான் விலைமதிக்க முடியாத திறமை. நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல்அமைதியாக முடிவெடுப்பதுஉற்சாகமான சூழ் நிலையில்சம நிலை இழக்காமல் இருப்பதுயாரையும் திருப்திபடுத்ததனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பதுஇவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள். உங்களுக்கு ஒரு நல்ல…

குறள் 347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. பொருள் (மு.வ): யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 82: நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்தவேய் வனப்புற்ற தோளை நீயே,என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே-போகிய நாகப் போக்கு அருங் கவலை,சிறு கட் பன்றிப்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எதிரி இல்லையென்றால் சண்டை இல்லைசண்டை இல்லையென்றால் வெற்றி இல்லைவெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை. ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர்நம்பிக்கையை பெற்றுள்ளார்;நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார். தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில்பயன் எதுவுமே இல்லை.அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.…

குறள் 346

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும் பொருள் (மு.வ): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 81: இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்றுஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவிகொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,பூண்கதில் பாக! நின் தேரே: பூண் தாழ்ஆக வன முலைக் கரைவலம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..உன் வாழ்க்கை.. உன் கையில்.! நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.! உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும்அன்பாய் பழகும் ஒருவர் உன்னுடன் இருந்தால்இந்த உலகமே உனக்கு வசப்பட்டு…

குறள் 345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க்கு உடம்பும் மிகை. பொருள் (மு.வ): பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.! முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்..மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்..முகத்தின் அழகு மாறிவிட கூடியது..மனதின் அழகு மாறுவதில்லை.! உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..தன் உயிர் இருக்கும் வரைமுயற்சி செய்து கொண்டு…

குறள் 344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து. பொருள் (மு.வ): தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.