• Fri. Mar 24th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஆளுநர் ரவிக்கு முரசொலி நாளேடு கேள்வி

ஆளுநர் ரவிக்கு முரசொலி நாளேடு கேள்வி

இன்னமும் சனாதனம், வர்ணாசிரமம், கடந்த காலம், வேத காலம் என்று பெருமை பேசி பிரிவினையை வளர்ப்பது யார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.‘திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தன’ எனும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு திமுகவின்…

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி மரணம்

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார். அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தை கவனித்து வந்தவர் வி.எம்.சுதாகர். பல்வேறு சூழல்களிலும் ரஜினி மக்க மன்றத்தினரையும், ரசிகர்களையும் நெறிப்படுத்தியும்…

போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை – டி.ஜி.பி. எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்துக்கு வந்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் ‘லிப்ட்’ மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு,…

அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் தயாராகி விடும்- அமித்ஷா

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.பாஜக ஆட்சி நடக்கும் திரிபுராவில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில்…

ரஷ்யா – உக்ரைன் இடையே தற்காலிக போர் நிறுத்தம்

உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி சுமார் ஓராண்டு ஆகும் நிலையில், போர் நிறுத்த அறிவிப்பு வருவது இதுவே முதல்முறை. கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி…

இன்று முதல் பிரமாண்ட சென்னை புத்தகக் காட்சி!!

சென்னை 46ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. புத்தக கண்காட்சியை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.46ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி இன்று தொடங்கி, ஜனவரி 22ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு விவகாரம் – ஐகோர்ட் உத்தரவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, போலீஸ் 19-ம் தேதிக்குள் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு… நாளை இறுதிக்கட்ட வாதம்

அதிமுக பொதுக்குழு வழக்கைஇந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதனால் நாளை இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி

திமுக துணைப்பொதுச் செயலாளரும். மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.திமுக துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்குப் பல்வேறு…

தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. அதே வேளையில் வானிலை மையம்…