பெங்களூரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நீ வெறும் போலீஸ் ட்ரைனிங் மட்டும் தான் ..,நான் போராளி டிரெய்னிங் சீமான் பரப்புரை ..
அண்ணாமலை தம்பி, நீ எடுத்து இருக்கிறது, வெறும் போலீஸ் ட்ரைனிங், நான் எடுத்திருப்பது போராளி ட்ரெயினிங். நீ ரொம்ப சாதாரணம் என் முன்னாடி! உனக்கு பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருவாரு. எனக்கு நான்தான் ஒட்டு கேட்பேன். அப்ப நான்தானடா கெத்து”
சென்னையில் 5 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.4 கோடி பணம் சிக்கியது
தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரட்டூரில் மட்டும் ரூ.2½ கோடி பணம் பிடிபட்டுள்ளது.
நெல்லை, கோவையில் வரும் ஏப்ரல் 12-ல் ராகுல் காந்தி பிரச்சாரம்!
ஏப்ரல் 12-ம் தேதி நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 12 மாலை கோவையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
கல்வித்துறை நடவடிக்கை:
அரசு பள்ளிகளில் 3லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் திருச்சி 103, கோவை,…
இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?
அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் மாநிலமாகவே இருக்கும்; பெயர்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை; -அருணாச்சல் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பை வெளியிட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நான் உங்கள் வீட்டின்…
அண்ணாமலை செருப்புக்கு சமானம்-செல்லூர் ராஜூ சாடல்
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளிலும், இஸ்ரோ…