• Fri. Jan 17th, 2025

பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை

ByG.Suresh

Apr 24, 2024

சிவகங்கை நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் கூட்டம் கூட்டமாகச்சுற்றித் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை நகர் முழுவதும் உள்ள கோழிக் கடைகளில் வெளியேறும் கழிவுகளை தின்பதற்காகவே இப்பகுதியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் தினமும் காத்துக்கிடக்கின்றன.
கழிவுகளை யார் முந்தி தின்பது என்பதில் நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு வெறிபிடித்தது போல ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்வதால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை நீடிக்கிறது.
குழந்தைகள் தினமும் வெளியில் செல்லும்போது விரட்டி துரத்தி கடிக்க முயற்சி செய்து அச்சுறுத்தி வருகின்றதாகவும் சொறி சிரங்கு பாதித்த நாய்கள் கடித்தால் குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக பலமுறை சிவகங்கைநகராட்சியிடம் புகார் அளித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லையெனவும். மேலும், இருசக்கர வாகனங்களை நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பிடம் சிறப்பு அனுமதி பெற்று அல்லது வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்து பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்களை பிடிப்பதற்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர் சிவன் கோவில் பகுதியில் இன்று புதன்கிழமை சுமார் 2 மணி அளவில் கோரிக்கை விடுத்துள்ளனர்