• Thu. May 2nd, 2024

சிவகங்கை நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பனங்குடி கிராமத்தில்ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்

ByG.Suresh

Apr 19, 2024

சிவகங்கை மக்களவைத் தொகுதி 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி,திருப்பத்தூர்,சிவகங்கை,மானாமதுரை
மற்றும் புதுக்கோட்டைமாவட்டத்திற்குட்பட்ட திருமயம்,ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி உட்பட மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களும், அதில் 160 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 2 மிக பதற்றமான வாக்குச்சாவடி மையமும் உள்ளன. 6 தொகுதிகளிலும் 8,02,283 ஆண் வாக்காளர்களும், 8,31,511 பெண் வாக்காளர்களும், 63 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 16,33,857 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், சிவகங்கை மக்களவை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் ஒரு மையத்துக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் மொத்தம் 3,686 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி,தேவையான இடங்களில் சாமியானா அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தேர்தல் பணியில், தலைமை அலுவலர்கள், என மொத்தம் 6,679 அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். சிவகங்கை மாவட்ட எஸ்பி தலைமையில் வெளிமாநில போலீஸார் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீஸார்,பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் தனது சொந்த ஊரான பனங்குடி கிராமத்தில் உள்ள ஆர் சி நடுநிலைப்பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *