கார் விபத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலியான சம்பலம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஏறகனவே இந்த ஆண்டில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், கார்விபத்தில் சிக்கி சைமண்ட்சும் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46). டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார். கார் விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி என 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பலியாகி வரும் சம்பவங்கள் ஆஸ்திரேலியாவிற்கும் மட்டுமல்ல உலகமுழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் விபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பலி
