மதுரை மாநகர் காவல் ஆணையர் s .ராஜேந்திரன் ips அவர்களது ஆணையின் படி,போக்குவரத்து துணை ஆணையர் s.வனிதா அவர்களது மேற்பார்வையில்…பெரியார் பேருந்து நிலையத்தில்.. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு. போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நேர மேலாண்மை குறித்த சிறப்பு வகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான பெரியார் பேருந்து நிலையத்திற்குள் உள்ளே நுழையும் பொழுதும்,நிறுத்தி பொதுமக்களை ஏற்றும்பொழுதும்,அங்கிருந்து புறப்படும் பொழுதும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றுm,விபத்தினை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்றும் செயல்முறை விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது..
இதில் காவல் போக்குவரத்து ஆய்வாளர்கள் அ.தங்கமணி, மா.பஞ்சவர்ணம்..மற்றும் அரசு போக்குவரத்து கழக இயக்க மேலாளர் அசோக்.. மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுனர், நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.. இறுதியில் காவல் ஆய்வாளர்கள் முன்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர்





