• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் விதிமுறை மீறி ஓடிய தனியார் பஸ் சிறை பிடிப்பு..,

ByS.Ariyanayagam

Aug 22, 2026

திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பயணிகளை ஏற்றி சென்று வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் போக்குவரத்து அலுவலகம் மூலமாக எந்தெந்த ஊரில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ஆணையை பெற்று பேருந்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் தனியார் பேருந்து ஒன்று பழனியில் இருந்து புறப்பட்டு ஒட்டன்சத்திரம் செம்பட்டி கொடைரோடு சோழவந்தான் வழியாக மதுரை பேருந்து நிலையம் செல்வதற்கான ஆணையை பெற்றுவிட்டு பேருந்தை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமலும் பயணிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையிலும் சாலை விதிமுறைகளை மீறி தறிகெட்டு இயங்கி வருவதாகவும்

மேலும் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாகவும் பழனியில் இருந்து மதுரையை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தை விசிக நிர்வாகிகள் திண்டுக்கல்லில் சிறை பிடித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.