• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Byவிஷா

Feb 5, 2025

பயணிகளின் வசதிக்காக சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாரம் இரு முறை சென்னை மதுரை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை சென்றடையும் இந்த ரயில் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. இது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தற்போது இந்த ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை (வியாழக்கிழமை) முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் இணைக்கப்படுகின்றன.